புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது. “மாநிலங்களவை எம்.பி. அல்லது மாநில எம்எல்ஏக் களை, அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளை தவிர்த்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களாக நியமிக்கலாமா?” என்று அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், “மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் - பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என எவரையும் வாக்கு எண்ணிக்கை மைய முகவராக நியமிக்க கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.