இதர மாநிலங்கள்

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மோடியை பாராட்டி தீர்மானம்

செய்திப்பிரிவு

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லி பாஜக அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிரேந்திர மோடிக்கு ராஜ்நாத் சிங் மலர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி வெற்றிக்கான பாராட்டுகளை தெரிவித்தார். மூத்த தலைவர் அத்வானி மோடியை தழுவி ஆசி வழங்கினார்.

ஆட்சி அமைப்பது, அமைச்சரவை பதவியேற்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர்.

முன்னதாக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அயராத உழைப்பையும், ஆளுமையையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், நரேந்திர மோடி வகுத்த பிரச்சார திட்டம் தான் தேர்தல் வெற்றிக்கு வித்திட்டதாக கூறப்பட்டிருந்தது.

மேலும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் மே 20-ல் பாஜக உயர்மட்ட குழு கூடி நரேந்திர மோடியை முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்திற்குப் பின்னரே மோடி பதவியேற்கும் நாள் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT