தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளைக் கடந்து புதிய வரலாறு படைத்தது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை 9.45 மணியளவில் சென்செக்ஸ் 1267.62 புள்ளிகள் உயர்ந்து 25,173.22 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
இதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 389.00 புள்ளிகள் உயர்ந்து 25,173.22 ஆக இருந்தது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறும் வகையில் முன்னணியில் உள்ளது.
இதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையில் வரலாறு காணாத உச்சம் நிலவுகிறது.