இதர மாநிலங்கள்

உத்தரப்பிரதேசம் நிலவரம்: கேஜ்ரிவால், முலாயமுக்கு பின்னடைவு

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மோடி, ராகுல், சோனியா ஆகிய வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

உ.பி.யில் 29 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

வாரணாசியில் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இரண்டாவது இடத்தில் உள்ளார். கேஜ்ரிவாலை விட மோடி 7299 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி அவரை எதிர்த்துப் போடியிட்ட பாஜக ஸ்மிரிதி இராணியை விட 1912 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

SCROLL FOR NEXT