இதர மாநிலங்கள்

மோடிக்கு சிதம்பரம் கண்டனம்

செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையம் குறித்து மோடி விமர்சனம் செய்திருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வியாழக் கிழமை கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தை நரேந்திர மோடி கடுமையாக தாக்கிப்பேசியது தேர்தல் மீது அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டதையே காட்டுகிறது. பாஜகவின் எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு மட்டுமேஅனுமதி தரவில்லை. இதுதான் அவர்களை கோபப்படுத்தியுள்ளது.

ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் தேர்தல் ஆணையம் பற்றி கடுமையாக குறை கூறி பேசுவது அவரைப்பற்றிதான் பேச வைக்குமே தவிர, தேர்தல் ஆணையத்தை அல்ல. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் இந்த பேச்சால் குறைந்து விடப் போவதில்லை. மாறாக குற்றம் குறைகளை கண்டுபிடித்துப் பேசுபவரின் குணத்தைத்தான் அம்பலப்படுத்தும்.

தேர்தல் முடிவுகள், வாக்களிக்க வந்தவர்கள் எண்ணிக்கை,. வன்முறை, அல்லது வன்முறைக்கு இடமின்றி அமைதியாக தேர்தல் நடப்பது உள்ளிட்டவற்றை வைத்தே தேர்தல் ஆணையத்தை அளவிட வேண்டும். யாரோ ஒருவர் கூறும் குற்றச்சாட்டை வைத்து எடை போடமுடியாது என்றார்.

SCROLL FOR NEXT