இதர மாநிலங்கள்

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் முன்னிலை

செய்திப்பிரிவு

16-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 989 மையங்களில் தொடங்கியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்றம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் முன்னிலை வகிக்கிறார்.

எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் மத்திய அமைச்சருமான கே.வி.தாமஸ் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எல்.டி.எஃப் வேட்பாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸை விட 729 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

கண்ணூரில் சிபிஐ-எம் வேட்பாளர் பி.கே.ஸ்ரீமதி 1442 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். கொல்லத்தில் யு.டி.எப் வேட்பாளர் என்.கே.பிரேம்சந்த் முன்னிலை வகிக்கிறார்.

SCROLL FOR NEXT