இதர மாநிலங்கள்

அதிமுகவின் ஆதரவை கேட்க பாஜக தலைவர்கள் ஆலோசனை

செய்திப்பிரிவு

பிஜு ஜனதாதளம், அதிமுக, தேசிய வாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட வற்றின் ஆதரவை கோருவதற் கான சாத்தியம் பற்றி பாஜக தலை வர்கள் டெல்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.

நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ள நிலையில் கட்சி யில் செய்ய வேண்டிய மாற்றங்கள், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு உள்ள சாத்தி யங்கள் பற்றி பாஜக மேல்நிலைத் தலைவர்கள் டெல்லியில் கூடி விவாதித்தனர் அப்போது, பிஜு ஜனதா தளம், அதிமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் ஆதரவு கோருவதற்கு உள்ள சாத்தியங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பாஜகவின் செயல் திட்டங் களை ஆதரிப்பதாக இருந்தால் ஒரு எம்.பி. உடைய கட்சியாக இருந்தாலும் அதன் ஆதரவை பெற தமக்கு தயக்கம் ஏதும் இல்லை என்பதை அந்த கட்சி ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் காலையிலிருந்தே தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தினர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜை அவரது வீட்டில் அவர் போபாலுக்கு புறப்படுவதற்கு முன்னதாக சென்று சந்தித்தார்.

கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரியும் சுஷ்மாவை சந்தித்தார். இந்த ஆலோசனை சுமார் 30 நிமிடம் நீடித்தது.

கட்சியில் உள்ள கோஷ்டிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய பணியில் ஈடுபட்டு வருகிறார் நிதின் கட்கரி. அடுத்த ஆட்சியில் பாஜகவின் முதுபெரும் தலைவர் எல்.கே.அத்வானிக்கு என்ன பொறுப்பு கிடைக்கும் என்பது பற்றி பல்வேறு ஊகம் வெளியாகி வரும் நிலையில் அவரையும் கட்கரி செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

அடுத்து ஆட்சிக்கு வரப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் என்பது போல வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அருண் ஜேட்லியை அவரது இல்லம் சென்று ஆலோசனை செய்தார் அமித் ஷா.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் ஆட்சி அமைப்பதற்கான சாத்தி யங்கள் பற்றி நரேந்திர மோடியுடன் விவாதிப்பதற்காக ராஜ்நாத், ஜேட்லி, கட்கரி ஆகியோர் குஜராத் சென்றுள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் செய்தி அடிபடுகிறது. ஆனால் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜ்நாத் சிங்கை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

பாஜக தலைமையில் ஆட்சி அமையும்போது கட்சியை பலவீனப்படுத்திட வேண்டாம் என ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவுரை வழங்கியுள்ளதாக கட்சி வட்டா ரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT