இதர மாநிலங்கள்

தாயின் முன்னிலையில் பிரதமராகும் முதல் நபர் மோடி

செய்திப்பிரிவு

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தன் தாயின் முன்பாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் முதல் நபர் என்ற பெருமை யை நரேந்திர மோடி பெறுகிறார். வெற்றி செய்தி வந்தபிறகு 95 வயதான தன் தாய் ஹீராபென்னை சந்தித்து நரேந்திர மோடி ஆசி பெற்றார்.

குஜராத்தின் தலைநகர் காந்தி நகரில் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசிக்கிறார் ஹீராபென். ஆசி பெற்ற மகனுக்கு பிடித்த லட்டை அன்புடன் ஊட்டிவிட்டார். வீட்டு வராண்டாவில் அமர்ந்தபடி தன் தாயுடன் சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் மோடி.

இது குறித்து ஹீராபென் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘என் மகன் மோடிக்கு எனது ஆசிர் வாதங்கள் எப்பவும் உண்டு. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக நான் பிரார்த்தனை செய்வேன்’ என்றார்.

இந்த சந்திப்பின்போது மோடியை காண்பதற்காக அப்பகுதி யில் வாழும் ஏராளமான பொதுமக் கள் ஹீராபென் வீட்டு முன்பாக கூடினர். மக்களவை தேர்தல் முடிவுகள் தமக்கு மாபெரும் வெற்றியை தந்து கொண்டிருக்க, இணையதளத்தில் தன் ட்வீட் பக்கத்தில் மோடி தம் தாயை சந்தித்து ஆசிர்வாதம் பெற விரும்பு வதாக குறிப்பிட்டிருந்தார்.

மோடியின் மற்றொரு சகோதரரான பிரஹலாத் மோடி சில தினங்களுக்கு முன்பு கூறுகை யில், ‘ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் இந்த நாட்டின் பிரதமராவார்’ என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வரும் தனது தாய் ஹீரா பென்னிடம் ஆசி பெறுகிறார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. தனது செல்போன் மூலம் எடுத்த இந்தப் புகைப்படத்தை, ‘விக்டரி வால்' என்ற பெயரில் தொடங்கி உள்ள தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT