மற்றவை

கார்த்தி சிதம்பரம் மீது பாட்னா வருமான வரித் துறை ஆணையர் புகார்

செய்திப்பிரிவு

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைத் தந்துள்ளதாக பிகார் மாநிலம் பாட்னா வருமான வரித் துறை ஆணையர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா தேர்தல் அலுவலர் வே.ராஜாராமனிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.அப்போது, ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான வே.ராஜா ராமனிடம், பாட்னா வருமான வரித் துறை ஆணையர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா புகார் தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைத் தந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 147 பக்கம் அடங்கிய புகாரை அளித்தார். பரிசீலனை நேரம் முடிந்துவிட்டதால், ஸ்ரீவஸ்தவா அளித்த புகார் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT