மற்றவை

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணால் திட்டங்கள் முடங்கின: ஈரோடு தேர்தல் கூட்டத்தில் நரேந்திர மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் வர வேண்டிய கட்டமைப்புத் திட்டங்கள் முடங்கிவிட்டன என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் சார்பில் ஈரோட்டில் வியாழக் கிழமை காலை நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:

சேலம், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற போது ஆளும் அரசுகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கிறேன். தற்போது நடை பெறும் தேர்தல் சிறப்பான தேர்தல். இந்த தேர்தலில் வேட்பாளர்கள், கட்சிகள் போட்டியிடவில்லை. இந்திய மக்கள்தான் போட்டியிடு கின்றனர். இந்தத் தேர்தல் வாயி லாக முடிவெடுக்கும் ஆற்றல் பெற்ற பிரதமரை, அரசை நீங்கள் உருவாக்கப் போகிறீர்கள்.

தமிழக மக்கள் மின் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நான் விரும்பவில்லை. குஜ ராத்தில் தற்போது மின் பற்றாக் குறை இல்லை. குஜராத்தில் இருந்து 12 வயதுள்ள ஒரு குழந்தை தமிழகத்துக்கு வந்தால், இங்குள்ள மின் நிலையை பார்த்து ஆச்சரியப்படும் நிலை உள்ளது.

திட்டங்கள் முடங்கின

தமிழகத்தின் பல கட்டமைப்புத் திட்டங்கள் தாமதமாவதற்கு தமிழ கத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் பொறுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பெண் காங்கிரஸைச் சார்ந்தவர். அவர்தான் தமிழகத்துக்கும், நாட் டுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்தி யுள்ளார். அது தமிழகத்தின் தவறோ, தமிழக மக்களின் தவறோ அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மாநிலங்களவைத் தேர்தல் மூல மாக வெற்றி பெற்றவர்.

பசுமை பாதுகாப்பு என்ற பெய ரில் திட்டங்களை அவர் முடக்கிவிட் டார். பசுமை, சுற்றுச்சூழல் என்ற பெயரில், ‘ஜெயந்தி டேக்ஸ்' என்ற வரி மூலம் நாட்டை விற்றுவிட்டனர். பசுமையை காரணம் காட்டி முடங் கிய திட்டங்கள் அந்த அமைச்சரை மாற்றியவுடன் இரவுடன் இரவாக 250க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் தாமதமானதற்கு யார் பொறுப்பு ஏற்பது? இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்தனர்.

18 முதல் 28 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது. உங்களது கனவு களை நிறைவேற்ற பல வாய்ப்புகள் இன்றைய உலகில் உள்ளன. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு வழங்குவோம்

தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 2012-ல் 77.43 லட்சம் பேர் வேலை இல்லை என வேலை வாய்ப் பகங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அரசு 10 ஆயிரத்து 800 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது. நாட்டிலேயே குஜராத்தில் 57 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வழங்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி அமைந்தால், பொருளாதாரத்தை புனரமைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவோம். தேசிய அளவில் பல்வேறு வேலைவாய்ப்பு கேந் திரங்களை உருவாக்குவோம். தொழிலாளர்களை மையமாக வைத்து உற்பத்தி துறை, சுற்று லாத் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்குவோம்.

நாட்டுக்கு நல்ல நிர்வாகம் தேவையாக உள்ளது. அதன் மூலமே நாடு முன்னேற முடியும். இளம் தலைமுறையினர் முதன் முறையாக வாக்கு செலுத்து பவர்கள் உங்கள் எதிர்காலத்தை யும், நாட்டின் எதிகாலத்தையும் குறித்து சிந்திக்க வேண்டும். உங்கள் வாக்கின் மூலம் எதிர் காலத்தை வளமாக்க முடியும். இது வரை நடந்த தேர்தலில் இளைய தலைமுறையினர் அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். இது தமிழகத் திலும் தொடரும் என நம்புகிறேன்.

நம்பத்தகுந்த மாற்றுசக்தி

வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், ராதாகிருஷ்ணன் தலைமையிலான புதிய அணி அமைந்துள்ளது. தமிழக அரசியலில் இது புதிய முயற்சி. இந்த அணியின் மூலம் நாங்கள் இந்தியாவின் முகத்தை யும், தமிழகத்தின் முகத்தையும் மாற்றுவோம். எதிர்காலத்தில் தமிழகத்தில் முக்கியமான நம்பத் தகுந்த மாற்றுச்சக்தி இந்த அணிதான். புதிய மாற்று சக்தியால் தான் டெல்லியில் ஒரு மாற்றம் ஏற்படும். பலம் வாய்ந்த அரசை மத்தியில் அமைக்க, தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT