தேர்தல் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில் இது வரை ரூ.21.52 கோடி ரொக்கமும், ரூ.17.88 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளி ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் துணை ராணுவப் படையினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரு கின்றனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்றுவிடுவர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் ரேண்டம் அடிப்படையில் வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப் படும். எந்த இயந்திரம், எந்த வாக் குச்சாவடிக்கு செல் கிறது என்பது தெரியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு ஏதும் செய்ய முடியாது. வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர் களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி 2 நாட்களில் முடிக்கப்படும்.
2 லட்சம் புகார்கள்
வாக்காளர்களை அரசியல் கட்சியினர் வாகனங்களில் அழைத்து வரக்கூடாது. வாக் காளர்கள் தங்கள் சொந்த வாகனங் களில் தாராளமாக வரலாம். வாகனத்தை வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் நிறுத்தி விட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறை களை மீறியதாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 214 புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக 2,727 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,163 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.21 கோடி ரொக்கம்
தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இதுவரை ரூ.21 கோடியே 52 லட்சத்து 13 ஆயிரத்து 658 ரொக்கமும், ரூ.17 கோடியே 88 லட்சத்து 27 ஆயிரத்து 631 மதிப்புள்ள தங்க, வெள்ளி ஆபரணங் களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன.
கை சின்னம் இல்லை
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸில் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை இடம் பெற்றிருப்பதாக புகார் வந்தது. அதுபோன்று எந்த சின்னமும் நோட்டீஸில் இடம் பெறவில்லை. வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்துவதை தெரிவிக்கும் வகையில்தான் அந்தப் படம் தோன்றும்.
இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.