இதர மாநிலங்கள்

தனிநபரிடம் நாட்டை ஒப்படைக்கக் கூடாது: ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி மீது ராகுல் தாக்கு

செய்திப்பிரிவு

நரேந்திர மோடி போன்ற தனிநபரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக தரப்பில் ஒருவரை (மோடி) முன்னிலைப்படுத்தி ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவரை காவலனாக்க விரும்புகின்றனர். சில நேரங்களில் காவலனே திருடனாக இருக்கக்கூடும். எனவே தனிநபரை நாட்டின் காவலனாக நியமிக்கக் கூடாது, அவரின் கையில் நாட்டை ஒப்படைக்கக் கூடாது.

இந்த நாட்டுக்கு கோடிக்கணக் கான காவலர்கள் தேவை. அப் போதுதான் ஒரு காவலர் தவறு செய் தால் மற்ற காவலர்கள் அதனைக் கண்டறிந்து தடுக்க முடியும்.

பெண்களைத் பின்தொடரும் போலீஸ்

குஜராத்தில் பெண்களை வேவு பார்க்க அவர்களின் பின்னே போலீஸார் அனுப்பப்படுகின்றனர். அவர்களின் தொலைபேசி உரை யாடல்கள் ஒட்டுக் கேட்கப்படு கின்றன.

கர்நாடகாவில் பாஜக தொண்டர் கள் பெண்களைத் தாக்குகின்றனர். சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் செல்போனில் ஆபாச படம் பார்க்கின்றனர். பாலி யல் பலாத்கார குற்றச்சாட்டுகளில் பாஜக தலைவர்கள் பலர் சிறை சென்றுள்ளனர். நாடாளுமன்றத் தில் மகளிர் மசோதா கொண்டு வரப்பட்டபோது பாஜக எம்.பி.க் கள் அதை எதிர்த்தனர். அவர்கள் எப்படி பெண்கள் முன்னேற்றம் குறித்துப் பேச முடியும்?

வெடித்துச் சிதறிய பாஜக பலூன்

2004, 2009 தேர்தல்களில் “குஜராத் முன்மாதிரி” என்ற கோஷத்தை எழுப்பி பெரிய பலூனை பாஜக வினர் பறக்கவிட்டனர். ஆனால் விவசாயிகள் எறிந்த கற்களில் அந்த பலூன் வெடித்துச் சிதறியது. அடிக்கடி குஜராத் முன்மாதிரி வளர்ச்சி என்று கூறுகிறார்கள். அங்கு பின்தங்கியவர்கள், ஏழை களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன?

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு விவசாயி கள், பெண்களின் நலன்களை கருத்திற்கொண்டு முடிவெடுக் கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.70,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்காகவும் பெண் களுக்காகவும் வங்கிக் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன என்றார் ராகுல் காந்தி.

SCROLL FOR NEXT