தமிழகத்தில் உயிருக்கும், உட மைக்கும் உத்தரவாதமில்லாத நிலை இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமையன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுகவின் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக் கையில் சட்டம்,ஒழுங்கு நிலை நாட்டப்படும் எனத் தெரிவிக் கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம், 5 ஆயிரத்து 603 படுகொலைகளும், 97 ஆயிரத்து 258 கொள்ளைகள், கூட்டுக்கொள்ளை, களவு உள்ளிட்ட மோசமான குற்றங் களும் நடந்திருப்பதாக, சட்டசபை யில் முதல்வர் ஜெயலலிதாவே கடந்த பிப்ரவரி 3ம் தேதி ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்தில் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
புது டெல்லியில் மருத்துவ மாணவிக்கு பாலியல் கொடூரம் நடந்தவுடன் பெண்களின் பாது காப்பிற்கு 13 அம்சத்திட்டம் ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் ஒரு அம்சத்தையாவது, இந்த 16 மாதங்களில் நிறைவேற்றினாரா? இல்லை. ஆட்சிக்கு வந்ததும் காவல்துறையை ஏவல்துறை யாக்கி எதிர்க்கட்சியினர் மீது, குறிப்பாக திமுகவினர் மீது, பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டார் ஜெயலலிதா.
தமிழகத்தில் பல்வேறு இடங் களில்,அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் மீது, நில அபகரிப்பு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிமுகவினர் மீது எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவற்றை மனதில் கொண்டு களத்தில் செயலாற்றுவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.