இதர மாநிலங்கள்

காங். வேட்பாளரிடம் ஏகே47 துப்பாக்கி விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய், நிழல் உலக தாதா கும்பலிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கியை வாங்கியிருப்பது குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட் டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிந்த்ரா தொகுதி எம்.எல்.ஏ. அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நிழல் உலக தாதா கும்பலிடம் இருந்து அஜய் ராய் ஏ.கே. 47 துப்பாக்கி வாங்கி யிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டில் பிஹாரைச் சேர்ந்த தாதா ஷாபுதீனிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியை அஜய் ராய் வாங்கியுள்ளார். இதனை அப்போதைய பிஹார் போலீஸ் டி.ஜி.பி. ஓஜா தனது ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் தனியார் தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் அண்மையில் அம்பலப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் நரேந்திர மோடியின் நண்பருமான அமித் ஷா, லக்னோவில் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சட்டவிரோத ஆயுத விற்பனை கும்பலுடன் அஜய் ராய்க்கு உள்ள தொடர்பை தனியார் தொலைக்காட்சி சேனல் வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியோ, துணைத் தலைவர் ராகுல் காந்தியோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

அஜய் ராய் விவகாரம் குறித்து காங்கிரஸ் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு பாது காப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் இவற்றை ஏன் செய்யவில்லை?

மத்திய அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள னர். பாதுகாப்பு மற்றும் வெளியு றவுக் கொள்கையில் காங்கிரஸ் செயல்பாடுகள் நகைப்புக்குரி யதாக உள்ளன. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT