இதர மாநிலங்கள்

மாநில கட்சிகள் ஆதரவு காங்கிரசுக்கே: சரத் பவார்

அமித் பரூவா, வர்கீஸ் கே.ஜார்ஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்களே தவிர ஒரு போதும் நரேந்திர மோடியை ஆதரிக்க மாட்டார்கள் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆதரவு ஆட்சி அமைவதை ஜெயலலிதாவும், மம்தா பானர்ஜியும் ஆதரிப்பர் என 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சரத்பவார் கூறியுள்ளார்.

மோடி மீது விமர்சனம்

2002 குஜராத் கலவரம் தொடர்பாக நீதிமன்றம் ஒரு நிலையை எடுத்துள்ளது. எனவே குஜராத் கலவரத்தில் மோடியை தொடர்புபடுத்தி மீண்டும், மீண்டும் சர்ச்சையை கிளப்புவது சரியாகாது என சரத் பவார் முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அதற்கு அப்படியே எதிர்மறையாக மோடியை விமர்சிக்கத் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் பவார்.

பவார் பேட்டியில் தெரிவித்ததாவது: "நரேந்திர மோடிக்கு நாட்டு மக்களில் கணிசமான அளவிளானோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிறுபான்மையினருக்கு மோடி மீது நல்ல அபிப்ராயம் இல்லை. குஜராத்தில், எனக்கு தெரிந்து மோடியை தவிர வேறு எந்த ஒரு அமைச்சரின் பெயரையும் நான் கேட்டதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு முன்னாள் அமைச்சர் அமித் ஷா மட்டுமே.

மோடி, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜஸ்வந்த் சிங், ஆஅகியோரை ஓரங்கட்டிவிட்டார். இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட ஒரு தேசத்தை ஒரு குழு நடத்திச் செல்ல வேண்டுமே தவிர ஒரு தனி மனிதன் அல்ல" என்றார்.

திடீரென மோடி மீது தனது விமர்சனத்தை கடுமையாக்கியுள்ளதற்கான காரணம் குறித்த கேள்விக்கு: விவசாயத் துறை அமைச்சராக பல்வேறு மாநில முதல்வர்களையும் கையாண்டிருக்கிறேன், அந்த வகையில் அந்த நபர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் என்ன? என்றார். மோடியை விமர்சிப்பதற்க்கு முக்கிய காரணம் அவரது அரசியல் நடைமுறையே என 2002 குஜராத் கலவரத்தை சுட்டிக் காட்டி பேசினார்.

SCROLL FOR NEXT