மற்றவை

மத்தியில் ஆட்சியமைக்க அதிமுக தயவு தேவையில்லை: ராஜ்நாத் சிங்

செய்திப்பிரிவு

மத்தியில் பாஜக ஆட்சியமைக்க அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது என்றார் அக் கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்.

பாஜக தலைமையிலான கூட் டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை திருச்சி வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“16-வது மக்களவைக்கு 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தல் பாஜகவுக்கு ஊக்க மளிக்கும் விதமாக உள்ளது. இந்த தேர்தலில் பாஜக 272-லிருந்து 300 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி யைப் பிடிக்கும் என்பதில் சந்தேக மில்லை. நிச்சயம் மோடி பிரதமரா வார். மத்தியில் பாஜக ஆட்சிய மைக்க அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது.

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியிலிருக்கும்போது ஒருவரை யொருவர் பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அத னால் தமிழகத்தில் வளர்ச்சி, நிர் வாகம் அடிபட்டுவிட்டது. வேலை வாய்ப்பின்மை, ஏழ்மை பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்காதவரை ஏழை மக்களின் சோகம் தொடரும்.

இவர்களுக்கு மாற்றாக இங்கு பாஜக ஐந்து கட்சிகளைச் சேர்த்து ஒரு வானவில் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த அணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் பாஜக அணி 20-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப் பற்றும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை யில் அந்நாட்டு அரசுடன் நேச உறவு கொண்டு தீர்வு காணப்படும். அங்கு அரசியல் பரவலாக்கத்துக்கும், அரசியல் தீர்வுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம். வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்.

தமிழக மீனவர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மீனவர் களின் நலன் காக்க தேசிய மீனவர் நல ஆணையம் உருவாக்கப்படும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுப்போம்.

மோடி பிரதமரானால் நாடு பிளவுபட்டுவிடும் என்று சொல் வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குஜராத்தில் அவர் 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது அந்த மாநிலம் பிளவுபடவில்லை. காங் கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை விழுங்கிவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த நிலையை மாற்றுவோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிலவற்றில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாக்குகள் பதிவாகு மாறு செய்துள்ளனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார் ராஜ்நாத் சிங்.

SCROLL FOR NEXT