மற்றவை

மக்களை திசை திருப்பும் கருணாநிதி: சரத்குமார்

செய்திப்பிரிவு

ஊழலை மறைப்பதற்காக கருணாநிதியும், ஸ்டாலினும் உள்ளுர் பிரச்சனைகளைப் பேசி, மக்களை திசை திருப்புகின்றனர் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

அவர் கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியது: திமுக கடந்த 9 ஆண்டு காலமாக மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்று, நிலக்கரி ஊழல், 2-ஜி ஸ்பெக்டரம் ஊழல் என அனைத்து ஊழல்களிலும் காங்கிரஸுக்கு துணை புரிந்துள்ளது. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

ஈழ விவகாரம், அந்நிய முத லீடு, கச்சத்தீவு பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைக ளிலும் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். பொரு ளாதார வீழ்ச்சிக்குப் பிறகு நடை பெறும் தேர்தல் இது. ஊழல் விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, கருணாநிதியும், ஸ்டாலினும் உள்ளூர் பிரச்சினைகளைப் பேசு கின்றனர். பாஜக தலைமையிலான கூட்டணி, கொள்கை முரண் பாடான கூட்டணியாகும். மோடி யும், ரஜனியும் நண்பர்கள். அவர்கள் சந்தித்ததில் அரசியல் இல்லை. நடிகர் விஜய், ஏற்கெனவே ராகுல்காந்தி, அன்னா ஹசாரேவை சந்தித்துப் பேசியுள் ளார். அவருடன் ரசிகர்கள் புகைப் படம் எடுக்க ஆசைப்படுவதுபோல், மோடியுடன் படமெடுக்க அவர் ஆசைப்பட்டிருக்கலாம், என்றார்.

SCROLL FOR NEXT