எம்.பி. ஹெலன் டேவிட்சனிடம் பேசினோம். “மங்களுர், ஹைதராபாத் உட்பட எட்டு புதிய ரயில்கள் அனுமதி பெறப்பட்டு இயங்கி வருகின்றன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. தொகுதிக்குள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இ.எஸ்.ஜ மருத்துவமனை கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. சாலை வசதிக்காக தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க 50 கோடி பெறப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. 18 கோடி ரூபாயில் குமரி கடலோரக் கிராமங்களில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது” என்றார்.