மற்றவை

துணை ராணுவப்படை வீரர்கள்: 2 ஆயிரம் பேர் தமிழகம் வருகை

செய்திப்பிரிவு

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக் காக துணை ராணுவப் படையைச் சேர்ந்த மேலும் 2 ஆயிரம் பேர் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப் புப் பணிகளில் மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 5 ஆயி ரம் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்ற னர். ஏற்கெனவே இரண்டு கட்டமாக 3,200 வீரர்கள் தமிழகம் வந்துள்ள னர். இவர்கள் அனைவரும் வாகன சோதனை பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 2 ஆயிரம் வீரர்கள் ஞாயிற்றுக் கிழமை தமிழகம் வந்தனர். இவர் களில் ஆயிரம் பேர் கோவை, விழுப்புரம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப் பப்பட்டனர். ஆயிரம் பேர் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களுக்கும், புதுச் சேரிக்கும் அனுப்பப்பட்டனர்.

தமிழகத்தில் 9,226 வாக்குச் சாவடிகள் கண்காணிக்கப்பட வேண்டியவை என அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தலுக்கு 2 நாள் முன்பே இந்த வாக்குச்சாவடி மையங்களை துணை ராணுவப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT