இதர மாநிலங்கள்

கார்ப்பரேட், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் நரேந்திர மோடி: பிரகாஷ் காரத் தாக்கு

செய்திப்பிரிவு

பாஜக பொது வேட்பாளர் நரேந்திர மோடி கார்பரேட் நிறுவனங்கள், மதவாத சக்தி களின் பொது வேட்பாளர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:

நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது. அதற்காக காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றி ணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் மார்க்சிஸ்ட் வேட் பாளரை வாபஸ் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால், கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மோடியை ஆதரிக்கின்றன. இதற்கு முன்பு காங்கிரஸை ஆதரித்த கார்பரேட் நிறுவனங்கள் இப்போது மோடிக்கு ஆதரவாக மாறியுள்ளன. கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் மதவாத சக்திகளின் பொது வேட்பாளராக மோடி உள்ளார்.

1991-ல் வாரணாசி தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் ராஜ் கிஷோர் நிறுத்தப்பட்டார். வாக்குப் பதிவுக்கு சில நாள்களுக்கு முன்பு பெரும் கலவரம் வெடித்தது. அந்தத் தேர்தலில் பாஜக முதல்முறையாக வெற்றி பெற்றது.

வாரணாசியில் மோடி நிறுத்தப்பட்டிருப்பதன் மூலம் மதத்தின் அடிப்படையில் வாக்கா ளர்களை ஈர்க்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருப்பது தெளி வாகிறது.

இந்த நேரத்தில் விவசாயி கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாசிச, முதலாளித்துவ, மதவாத சக்தியை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். வாரணாசியில் மோடியை தோற்கடித்து இடது சாரி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT