திண்டுக்கல்

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

அ.தி.மு.க- வை எம்.ஜி.ஆர். தொடங்கியதும் 1973-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இந்தத் தேர்தல்தான் அ.தி.மு.க-வின் தலைவிதியை நிர்ணயம் செய்வதாக இருந்தது. அ.தி.மு.க. சார்பில் கே.மாயத்தேவரும், தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கமும் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரிகள் மாயத்தேவருக்கு சுயேட்சைக்கான சின்னங்களைக் காட்டி ஒன்றைத் தேர்வு செய்யக் கூறினர். மாயத்தேவர் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்வு செய்தார். இந்தச் சின்னம்தான், இன்று வரை அ.தி.மு.க-வின் சின்னமாக நிலைத்திருக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க-வுக்குத் திருப்பம் தந்த தொகுதி இது.

SCROLL FOR NEXT