வாக்காளர்கள் பட்டியலில் தனது பெயர் இல்லாததால், தன்னால் வாக்குப் பதிவு செய்ய முடியவில்லை என்று பிஹார் காவல்துறை இயக்குநரக தலைவர் (டி.ஜி.பி.) அபயானந்த் கூறினார்.
இதே காரணத்திற்காகத்தான் கடந்த முறையும் தன்னால் வாக்க ளிக்க இயலாமல் போனது என்றும் அவர் கூறினார். பிஹாரின் 7 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. பாட்னா சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும், அந்த மாநில டி.ஜி.பி. அபயா னந்த், தனது வாக்குப் பதிவை செலுத்தவில்லை. அவரின் பெயர் வாக்காளர் பட்டி யலில் இடம் பெறாததே இதற்கு காரணம்.
இது தொடர்பாக அபயானந்த் செய்தியாளர்களிடம் கூறியதா வது: “வேலைப்பளு காரணமாக எனது பெயர் வாக்காளர் பட்டிய லில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் நான் ஈடுபட வில்லை. மாநிலத்தின் 7 தொகுதி களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறேன்” என்றார்.
அபயானந்த் தற்போது பாட்னாவின் சாஸ்திரி நகர் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட படேல் நகரில் வசித்து வருகிறார். இப்பகுதி பாட்னா சாஹிப் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா (பாஜக), போஜ்புரி நடிகர் குணால் சிங் (காங்கிரஸ்), கோபால் பிரசாத் சின்ஹா (ஐக்கிய ஜனதா தளம்), பிரவீண் அமானுல்லா (ஆம் ஆத்மி) ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.