இதர மாநிலங்கள்

மேனகா காந்திக்கு ரூ.40 கோடி சொத்து

செய்திப்பிரிவு

பிராணிகள் நல ஆர்வலரும் பா.ஜ.க. எம்.பி.யுமான மேனகா காந்திக்கு ரூ. 40 கோடி சொத்துகள் உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் அவோன்லா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருக்கும் மேனகா காந்தி தொகுதி மாறி இருக்கிறார். தற்போது பிலிபிட் தொகுதி யில் களம் இறங்கி உள்ளார். இந்த தொகுதியின் இப்போதைய எம்.பி.யாக இருப்பவர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி.

பிலிபிட் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த மேனகா காந்தி (57), அதனுடன் தனது சொத்து மதிப்பு விவரத்தை தாக்கல் செய்துள்ளார்.

அசையும் சொத்துகள் மதிப்பு ரூ. 12.46 கோடி, அசையா சொத்து கள் ரூ, 24.95 கோடி என மொத்தம் ரூ. 37.41 கோடி மதிப்புக்கு தனக்கு சொத்து உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தி ருக்கிறார். சொந்தமாக காரோ அல்லது வேறு வாகனங் களோ அவருக்கு கிடையாது.

அவர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 40 ஆயிரம், வங்கிக்கணக்கில் உள்ள ரூ. 6 கோடி, ரூ. 1.47 கோடி மதிப்பு வெள்ளி ஆபரணங்கள் ஆகியவையும் மேனகாவின் அசையும் சொத்துகளில் அடங் கும். ரூ. 6.95 கோடி மதிப்பிலான வணிக வளாகம், ரூ. 18 கோடியில் வீடு, ஆகியவை அவருக்கு உள்ளது. கையில் உள்ள இருப்பு ரூ. 39,365 ரூபாய்.

2 வழக்கு

மேனகா மீது 394 வது பிரிவு மற்றும் 506-வது பிரிவின் கீழ் இரு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கை பிலிபிட்டில் உள்ள ஒரு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இருப்பினும் அலகா பாத் உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான விசாரணைக்கு கடந்த ஆண்டு மே 4-ம் தேதி தடை விதித்தது. -

SCROLL FOR NEXT