பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் வெளியாகி உள்ள வீடியோ பதிவுகள் பாஜகவின் மதவாத முகத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்வதாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறிய தாவது: பாபர் மசூதி இடிப்பு குறித்து கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள ரகசிய வீடியோ பதிவுகளில் பாஜக தலைவர்கள் உரையாடல் கள், உமாபாரதி உள்ளிட்டோர் நடனமாடியது போன்றவை வெளிவந்துள்ளன. பாஜக. - ஆர்.எஸ்.எஸ். - விஹெச்பி. தொடர்புகள், பிரிவினை பேச்சுகள் பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
லிபரான் கமிஷன் உள்ளிட்ட பல கமிஷன்களில் பாபர் மசூதி இடிப்பில் பாஜகவின் தொடர்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள ரகசிய பதிவின் ஆதாரங்கள் மீண்டும் ஒருமுறை அக்கட்சியின் மதவாத முகத்தை உறுதி செய்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு சம்பவத் துக்கு அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவின் தோல்வியே காரணம் என்று கூறுவது தவறு. அன்றைய தினம் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமுலம் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம் எப்படி அவர்களது வார்த்தையை நம்பியதோ, அதுபோல் மத்திய அரசும் நம்பியது எனக் கூறினார்.