இதர மாநிலங்கள்

டெல்லியின் 7 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலுக்காக டெல்லியில் இருக்கும் ஏழு தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுடனான நேரடிப் போட்டியில் அனைத்து ஏழு தொகுதிகளையும் வென்ற காங்கிரஸுக்கு இந்தமுறை ஆம் ஆத்மி கட்சியும் இணைந்ததால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதில், மூன்றாவது முறையாக அதே தொகுதிகளில் போட்டியிடும் மத்திய சட்டத்துறை அமைச்சரான கபில்சிபல், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் கிருஷ்ணா தீர்த் மற்றும் முன்னாள் அமைச்சரான அஜய் மக்கான் ஆகியோரின் தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது.

SCROLL FOR NEXT