இதர மாநிலங்கள்

டீ விற்பவர் போட்டியிடும்போது நான் போட்டியிடக் கூடாதா?: செருப்பு தைக்கும் ஜக்கு

செய்திப்பிரிவு

டீ விற்பவர் (நரேந்திர மோடி) பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் போது, செருப்பு தைக்கும் தொழி லாளி எம்.பி.யாகப் போட்டியிடக் கூடாதா என்று கேள்வி கேட்டபடியே வாக்கு சேகரிக் கிறார் ஓம்பிரகாஷ் ஜக்கு (78).

இதுவரை மூன்று மக்களவைத் தேர்தல்கள், 7 சட்டப்பேரவைத் தேர்தல்கள், 6 உள்ளாட்சித் தேர்தல்கள் என 16 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள இவர், இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. 17-வது முறையாக தன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்க பஞ்சாப் ஹோஸியர்புர் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியான ஜக்கு செருப்பு விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். தன் பேரன் பரிசளித்த ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி. மொஹிந்தர் சிங் கபீ, பாஜகவின் விஜய் சம்ப்லா, ஆம் ஆத்மியின் யாமினி கோமர் என பெரும் தலைகளை எதிர்த்துக் களமிறங்குகிறார். வரும் 30-ம் தேதி இங்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இத்தொகுதியைச் சேர்ந்தவர்களில்லை என்பதை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யும் ஜக்கு, மண்ணின் மைந்தர்கள் ஒருவர்கூடவா கிடைக்கவில்லை எனச் சாடுகிறார்.

SCROLL FOR NEXT