இதர மாநிலங்கள்

மோடிக்கு பதவியைப் பற்றி மட்டுமே கவலை: காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நரேந்திரமோடிக்கு தனது பதவியைப் பற்றி மட்டுமே கவலை, மக்களைப் பற்றிக் கவலையில்லை என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் சோனியா வியாழக் கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: குஜராத்தில் ஒரு நாளைக்கு ரூ.11க்கு மேல் வருவாய் ஈட்டினால் அவரை குஜராத் அரசாங்கம் ஏழையாகக் கருதாது. இதைவிட வேறு என்ன வேண்டும். இதுதான் சொர்க் கமா? பாஜகவினர் தங்களது பதவியைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். ஏழைக ளைப் பற்றி யோசிப்பதில்லை.

பள்ளியிலிருந்து இடை நிற்கும் மாணவர்களின் விகிதம் நாட்டிலேயே குஜராத்தில்தான் அதிகம். குறுகிய மனப்பான் மையை யும், சமூகத்திற்கிடையே பிரிவி னையை உருவாக்குவதும் பாஜகவின் சித்தாந்தம். தேசத்தை ஒற்றுமைப்படுத்துவதும், பல்வேறு மதங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்து வதும் காங்கிரஸின் சித்தாந் தம். குரூரம் நிறைந்த பாஜகவின் சித்தாந்தம் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும். அதுபோன்ற கொள்கைகள் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப் பட்டுவரும் தேசத்தின் கொள்கை களைக் கூறுபோட்டு விடும்.

சமூகத்தில் அனைவரும் சமம் என்ற வலுவான ஜனநாயகக் கட்டட மைப்பில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. பிரிவினை வாத சக்திகளின் தவறான வழிநடத்தலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; அவர்களை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பாஜக ஊழலில் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டது. அக்கட்சியினர் காங்கிரஸ் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு களைக் கூறிவருகிறது. ஊழலுடன் தொடர்புள்ளவர்கள் மீது நேரடி நடவடிக்கையை காங்கிரஸ் எடுத்துள்ளது. பாஜக அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றார்.

SCROLL FOR NEXT