வேட்புமனு தாக்கலின்போது இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் தான் திருமண மானவர் என்ற தகவலைs மறைத் தார் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக கொடுத்துள்ள புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யும் படி நகர காவல்துறைக்கு அகமதாபாதில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எம்.எம், ஷேக் காவல் துறைக்கு அனுப்பிய உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளார். மோடி மீதான புகார் மீது நடத்திய புலனாய்வு எந்த நிலையில் உள்ளது என்பதை 3 வாரத்துக்குள் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த புகார் மனுவை தாக்கல் செய்தது ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர். இவர்தான் ராணிப் காவல் நிலையத்தில் இந்த புகாரை கொடுத்தார். 2012ல் நடந்த குஜராத் பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத் தில் திருமணமானவரா என்பதை தெரிவிக்காமல் மோடி மறைத்ததாக இந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
2012ல் நடந்த தேர்தலில் மணி நகர் பேரவைத்தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த பி.கே.ஜடேஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்மா கோரியுள்ளார். வதோதரா மக்களவைத் தொகுதிக்கு போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாணப் பத்திரத்தில், தான் திருமணமானவர் என்றும் தனது மனைவி பெயர் யசோதா பென் என்பதையும் முதல்முறையாக மோடி அறிவித்தார்.
முந்தைய தேர்தல்களின்போது, மோடி திருமணமானவர் என்பதை மறைத்தது பற்றி தான் கொடுத்த புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடினார் வர்மா.
மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி அனிதா கார்வாலுக்கும் கடிதம் எழுதினார் வர்மா.