இதர மாநிலங்கள்

சச்சின் வாக்களித்தார்

செய்திப்பிரிவு

கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் வாக்க ளித்தார். நேற்று அவரது 41-வது பிறந்தநாள். அன்றைய தினமே அவர் வாக்களித்தது சிறப்பம்சமாக அமைந்தது.

மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் தனது வீட்டுக்கு அருகே உள்ள வாக்குச் சாவடியில் மனைவி அஞ்சலியுடன் வந்து சச்சின் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பாரத ரத்னா விருது பெற்றவ ரான சச்சின், இப்போது மாநிலங் களவை எம்.பி.யாகவும் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பின்பு அவர் கொண்டாடிய முதல் பிறந்த நாளாகவும் நேற்றைய தினம் அமைந்தது.

வாக்களித்ததற்கு அடையா ளமாக மை வைக்கப்பட்ட தனது விரலை காட்டும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள சச்சின், பிறந்த நாளன்று நாட்டின் பொறுப்புமிக்க குடிமகனாக வாக்களித்து எனது கடமையை நிறைவேற்றியுள்ளேன். நீங்கள் வாக்களித்து விட்டீர்களா என்று கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதை முன்னிட்டு துபாயில் இருந்த சச்சின், இரு நாள்களுக்கு முன்புதான் இந்தியா திரும்பினார். கடந்த ஆண்டு வரை மும்பை இண்டியன்ஸ் அணியில் சச்சின் இருந்தார். ஓய்வு பெற்றுவிட்டதால் ஐபிஎல் போட்டியில் அவர் விளை யாடவில்லை.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் விரன் ரஸ்கின்கா, முன்னாள் பாட்மிண் டன் வீரர் பிரகாஷ் படுகோன், பில்லியர்ட்ஸ் வீரர் கீத் சேத்தி ஆகியோரும் மும்பையில் வாக்களித்தனர்.

SCROLL FOR NEXT