இதர மாநிலங்கள்

பிஹாரில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் யாதவ், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுபவுல் மாவட்டத்தில் ராஷ்ரிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் யாதவ் இன்று காலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்கு, அரசியல் ரீதியான எதிரிகளே காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரவீந்தரின் படுகொலை சம்பவம் குறித்து அறிந்த அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, ரவீந்தர் யாதவுக்கு கொலை மிரட்டல்கள் ஏற்கெனவே விடுக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT