மற்றவை

மின் தட்டுப்பாடு: திமுக-வை சேர்ந்த அதிகாரிகளே காரணம் - நடிகர் ராமராஜன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படுவதற்கு திமுகவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரின் சதி வேலையே காரணம் என, நடிகர் ராமராஜன் குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, நடிகர் ராமராஜன் பொன்னேரியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய தகுதி இல்லை. 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது போல், விஜயகாந்தும் தனியாக வேட்பாளர்களை நிறுத்த வேண்டியதுதானே. மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி என்று கூறிவிட்டு விஜயகாந்த் இன்று பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதற்கு திமுகவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் சதி வேலை செய்து வருகின்றனர். விரைவில் இப்பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்பட உள்ளது என்றார்.

பிரச்சாரத்தின் போது அவருடன், பொன்.ராஜா எம்எல்ஏ, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகன வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT