சமீபத்தில் 'அனைத்து சமுதாயப் பேரியக்கம்' என்ற பெயரில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து சென்னையில் ஆலோசனை நடத்தின. அனைத்து சாதி அமைப்புகளின் துணையோடு தேர்தலை பா.ம.க. சந்திக்க திட்டமிடுவதாக பேச்சு எழுந்தன.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 'மலர்ந்திருக்கிறது', பாமக தலைமையிலான 'சமூக ஜனநாயகக் கூட்டணி'. இது 2 ஆண்டு கால முயற்சி என்கிறார், பாமக நிறுவனர் ராமதாஸ். (முழு விவரம் - >சமூக ஜனநாயகக் கூட்டணி தொடக்கம்; மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக)
சமூக ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள், அமைப்புகள் பற்றிய விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று அவர் கூறினாலும், சமீபத்திய பாமகவின் நடவடிக்கைகளில் இருந்தே, இந்தப் புதிய கூட்டணியில் மிகுதியாக இருப்பது சாதி அமைப்புகள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
“இந்தப் புதிய கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும். புதிய கூட்டணி எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும்” என்கிறார் ராமதாஸ்.
'சமூக ஜனநாயகக் கூட்டணி': பாமக வியூகத்தின் விளைவு எப்படி இருக்கும்? - விவாதிக்கலாம் வாங்க.