காவிரியின் கடைமடை மற்றும் காவிரி கடலில் கலக்கும் இடம், சோழர் காலத்தின் அடையாளங்கள் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. பாபநாசம் மூப்பனார் நின்று வென்ற தொகுதி. தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை முன்சீப் ஆக இங்கு பணியாற்றியிருக்கிறார். எம்.கே. தியாகராஜ பாகவதர், இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பிறந்த ஊர் இது. மாயவரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் திருமுறைகளில் மயிலாடுதுறை என்று குறிப்பிட்டிருந்ததை ஒட்டி தமிழக அரசால் மயிலாடுதுறை என்று பெயர் மாற்றம் பெற்றது.