இ.ஜி. சுகவனம் எம்.பி. அலுவலகத்தில் தொடர்புகொண்ட போது, “கிருஷ்ணகிரி முதல் புதுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலையை இருவழிப் பாதையாக மாற்ற மத்திய அரசிடம் ரூ.460 கோடி நிதி பெறப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பின் தங்கிய பகுதியான தளியில் நகரங்களுக்கு இணையான சாலை வசதிகள் எம்.பி. நிதியில் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதல் முறையாக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி முதல் வாலாஜாபேட்டை வரை நான்கு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுவருகிறது. ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதைத் திட்டத்துக்குத் திட்ட கமிஷனிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்கள்.