வெ. ஜீவக்குமார் - அ.இ. வழக்கறிஞர் சங்க மாநில துணைத் தலைவர், தஞ்சாவூர்.
நீண்ட சட்டப் போராட்டத் துக்குப் பின்னர் கிடைத்த காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்து வதற்கான மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தை அமைக்காமல், மத்திய அரசு தாமதிக்கிறது. இதனால், தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற முடியவில்லை. தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து, அடுத்த சாகுபடி தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வ. சேதுராமன் - காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சைக் கோட்ட இணைச் செயலர், மன்னார்குடி.
நெல் ஆராய்ச்சி மையம் இருந்தும், வேளாண்மைக் கல்லூரி இங்கு இல்லை. இங்கு தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை அமைக்கலாம். நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள் இல்லை. சிறு தானிய உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டங்களோ, உணவு மண்டலங்களோ கிடையாது. தஞ்சை - நாகை நான்கு வழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சாவூர் - மன்னார்குடி - வேதாரண்யம் சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்.