செந்தில்ராஜா - ரியல் பவுண்டேஷன் தொண்டு நிறுவன இயக்குநர்.
அதியமான் கோட்டை யில் தருமபுரி வானொலி நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிலையம், தற்போது காலை 6 மணி முதல் நண்பகல் 12மணி வரை பகுதி நேரமாக மட்டுமே செயல்படுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வானொலி நேயர்கள் அதிகம்.
இதனை முழு நேரச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தால், உள்ளூர் நிறுவனங்கள் விளம்பரங்கள் அளிக்கத் தயாராக உள்ளன. இதன் மூலம் வானொலி நிலையம் வர்த்தகரீதியாகவும் மேம்படும்.
சரவணக்குமாரி - பா.ம.க. மகளிர் சங்க மாநிலத் துணைச் செயலாளர்.
சுயசார்புடன் மகளிர் முன்னேறுவதற்குத் தொகுதியில் எந்தத் திட்டமும் நிறைவேற்ற வில்லை. படிப்பறிவு குறைந்த நிலையில் இருக்கும் தருமபுரியில் டாஸ்மாக் மதுவுக்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகிவிட்டனர். சம்பாதிக்கும் சொற்பக் கூலியையும் டாஸ்மாக்கில் இழந்துவருகிறார்கள்.
கல்லீரல் நோய்களால் நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள் இங்கு ஏராளம். இவர்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.