விருதுநகர்

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் கடந்த 1985-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி ராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர் என்று மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. எல்.என்.விஜயராகவன் விருதுநகரின் முதல் ஆட்சியர்.

தமிழகத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தலைசிறந்த நகரமாக விளங்கியதால் விருதுபட்டி, காமராஜர் ஆட்சியில் விருதுநகர் ஆனது. படிக்காத மேதை என்று அழைக்கப்படும் காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர். எண்ணெய், பருப்பு வகைகள், மிளகாய்வத்தல் உள்ளிட்ட மளிகை, பலசரக்குப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் முக்கிய வர்த்தக ஸ்தலமாகவும் விளங்கியது விருதுநகர்.

SCROLL FOR NEXT