இதர மாநிலங்கள்

சுப்பரமணியன் சுவாமி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்

ஆர்.ஷபிமுன்னா

தம் மீதும் தன் மனைவி மீதும் பொய் புகார்கள் கூறியதற் காக பாஜக மூத்த தலைவரான சுப்பரமணியன் சுவாமி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டு மென மத்திய சட்டத்துறை அமைச் சர் கபில் சிபல், மத்திய தேர்தல் ஆணையர் ஹெச். எஸ்.பிரம்மா விடம் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் சாந்தினி சவுக் தொகுதியில் கபில் சிபல், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பிரமாணப் பத்திரத்தில் மனைவியின் மூன்று சொத்துக் களை மறைத்ததாக சுப்பிரமணி யன் சுவாமி தேர்தல் ஆணை யத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து சிபல் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘சுவாமி கூறிய சொத்துக்கள் எனது மனைவி பெயரில் இருந்தால், அதனை அப்படியே சுவாமிக்கு இலவசமாக கொடுத்து விடுகி றேன். என் மீது பொய்யான புகாரை அளித்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் கோரியுள் ளேன்’ என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த சுவாமி ‘கபில்சிபல் மனைவிக்கு மூன்று நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து நான் எழுப்பிய புகாரில் சட்டப் படியில்லாமல் மழுப்பலாக சிபல் பதில் அளித்துள்ளார்’ என்றார்.

SCROLL FOR NEXT