நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து முதல்வர் ஜெய லலிதா பேசிய கருத்துக்கு இந்து முன்னணி அமைப் பாளர் ராமகோபாலன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முந்தைய வாஜ்பாய் அரசில் நதிநீர் இணைப்பு என்பது பேச்சளவில் இருந்ததாக ஜெயலலிதா குறிப் பிட்டுள்ளார். இது தவறான கருத்தாகும். வாஜ்பாய் அரசு, நதி நீர் இணைப்பை ஒரு கொள்கையாக அறிவித்து, அதுகுறித்து ஆராய ஒரு குழுவையும் நியமித்தது. அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.
சேது சமுத்திர திட்டத்திலும் அப்படித்தான் வாஜ்பாய் அரசு செயல்பட்டது. ஆனால், மத்தியில் ஆளும் காங் கிரஸ் அரசு, தன்னிச்சையாக வழித்தடத்தை மாற்றியதால் தான் பிரச்சினை ஏற்பட்டது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் நதி நீர் இணைப்பை செயல்படுத்தி வருவதாக தமிழக முதல் வர் தெரிவித்துள்ளார். அது தவறு. பாலாறு, பெண்ணையாறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். டாக்டர் காமராஜ் என்பவர், தமிழகத் தில் உள்ள 16 சிறு நதிகளை இணைக்கும் திட்டத்தை ஆராய்ந்து முழு செயல்வடிவத்தை தயாரித்துள்ளார். தமிழகத்தில் நதி நீர் இணைப்புக்கு முழு செயல்வடிவம் கொடுக்க முதல்வர் நினைத்தால், இதுகுறித்து நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமகோபாலன் கூறியுள்ளார்.