சேகரன் - தலைவர், திருச்சி மாவட்டச் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு.
திருச்சியில் பாய்லர் ஆலை மற்றும் அதற்கு உப பொருட்களைச் செய்துதரும் சுமார் 300 தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் இந்தத் தொழிற்சாலைகளை நம்பி இருக்கின்றன. சமீப காலமாக பாய்லர் ஆலைக்கு உற்பத்தி ஆர்டர் பெருமளவு குறைந்துவிட்டது. மேலும், முன்பு பாய்லர் ஆலை நிர்வாகம் சிறு நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கும்போதே அதற்கான மூலப் பொருட்களையும் வழங்கிவிடும்.
ஆனால், தற்போது சிறு நிறுவனங்களே மூலப் பொருட்களைச் சொந்தமாக வாங்கி ஆர்டருக்கான பொருட்களை உற்பத்திசெய்து வழங்க வேண்டும் என்கிறது ஆலை நிர்வாகம். இதற்குப் பெருமளவு முதலீடு வேண்டும் என்பதால், சிறு நிறுவனங்களெல்லாம் நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடுகின்றன. இதனால், பல சிறு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. ஏற்கெனவே மின்வெட்டு, குறைந்த ஆர்டர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு நிறுவனங்கள், இந்த நடைமுறையால் மூடும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சிறு தொழிற்சாலைகளைக் காப்பாற்ற வேண்டும்.