சேலம்

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

வரலாற்றில் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்ட சேலம், கல்வெட்டுகளில் சேலம் ஊர், சேலம் நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சேலம் என்ற சொல் ‘சைலம்’ என்ற சொல்லிலிருந்து உருவானது என்று சொல்கிறார்கள். சைலம் எனில் ‘மலைகள் சூழ்ந்த இடம்’ என்று பொருள். சேலம் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

1768-ல் மதுரை - மைசூர் போரில் ஹைதர் அலி சேலத்தைக் கைப்பற்றினார். 1799-ல் ராபர்ட் கிளைவ் சேலத்தைக் கைப்பற்றி, சங்ககிரி துர்கத்தைத் தலைமை இடமாகக்கொண்டு நிர்வாகம் செய்தார். சி.வி. ராஜகோபாலச்சாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் சேலத்தைச் சேர்ந்தவர்கள். 1937-ல் முதன்முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டம் என்ற பெருமை கொண்டது சேலம்.

SCROLL FOR NEXT