திருவள்ளூர்

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பொன்னேரி (தனி)

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் பொன்னேரி (தனி)

வென்றவர்: பொன்.ராஜா(அதிமுக)

பெற்ற வாக்குகள்: 93624

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: A.மணிமேகலை (திமுக)

பெற்ற வாக்குகள்: 62354

மீனவ மக்கள், விவசாய பெருங்குடிகள் பரவலாக உள்ள தொகுதி பொன்னேரி. அதிமுக வின் பொன்.ராஜா இந்த தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர். அருகாமையில் பள்ளி , கல்லூரிகள், குடிநீர் வசதி, ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.சட்டம் ஒழுங்கின் நிலைமை , தரமான சாலை வசதி ஆகியவை மக்களின் பெரும் திருப்திக்கான விசயங்களாக பதிவாகியுள்ளது.

கழிவு நீரகற்ற பாதாள சாக்கடை வசதிகள் இல்லாதது, பொது சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் ஆகியவை சுமார் ரகங்கள். பழவேற்காட்டை சுற்றுலா தளத்தை மேம்படுத்தாது, விவசாயிகளுக்கு அரசின் உரிய உதவிகள் முறையாக கிடைக்கவில்லை. பொன்னேரி ரயில் நிலையம் மேம்படுத்த வேண்டும் ஆகியவை மக்கள் எதிர்பார்ப்புகளாக திகழ்கிறது.

SCROLL FOR NEXT