தென் சென்னை

உங்க தொகுதி எப்படி இருக்கு? - தியாகராய நகர்

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் தியாகராய நகர்

வென்றவர்: வி.பி.கலைராஜன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 75883

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஏ. செல்லகுமார் (காங்)

பெற்ற வாக்குகள்: 43421

அதிமுகவின் வி.பி.கலைராஜன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். பெரிய ஜவுளிக்கடைகள், தங்க நகைக் கடைகள், ஏராளமான நடைபாதை கடைகள் என்று சந்தை போல் மக்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது தியாகராய நகர்.சைதாப்பேட்டையைப் போன்றே தி,நகர் தொகுதியிலும், அடிப்படை வசதிகள் பெரும்பாலும் சீராக இருப்பதாகவே மக்கள் கூறியுள்ளனர்.

முக்கியமாக வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் கழிவுநீர் மேலாண்மை முதலியவை நன்றாக உள்ளதாக 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT