திருவள்ளூர்

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

எம்.பி-யான வேணுகோபாலிடம் பேசினோம். “நெமிலிச்சேரியில் புதிய ரயில் நிலையம் திறக்கப் பட்டுள்ளது. திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் 5.70 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதைப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. டயாலிசிஸ் சிகிச்சைக்காக திருவள்ளூர், பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் ரூ.30 லட்சத்தில் சிறப்புச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சோழவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 14 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

44 ரேஷன் கடைகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சோழஞ்சேரியில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.1.27 கோடியில் தடுப்பணை, சாலைப் பணிகள் துவக்கப் பட்டுள்ளன. நில ஆர்ஜிதம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் கடம்பத்தூர், புட்லூர், வேப்பம்பட்டு ரயில் நிலையங்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் தடைபட்டுள்ளன. திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாகத் தரம் உயர்த்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார்” என்றார்.

SCROLL FOR NEXT