கிருஷ்ணகிரி

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

செய்திப்பிரிவு

ஜி. ரமேஷ்குமார் - அ.தி.மு.க., ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளர், கிருஷ்ணகிரி தொகுதி:

எம்.பி. சுகவனத்தைத் தேர்தல் சமயத்தில் வாக்கு கேட்கும்போது பார்த்ததோடு சரி. நன்றி சொல்லக்கூட இதுவரை அவர் எந்தப் பகுதிக்கும் சென்றதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் அரசோடு பங்கெடுத்திருந்தது. எம்.பி. நினைத்திருந்தால், இந்த மாவட்டத்துக்கு நிறைய திட்டங்களைக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் இந்த மாவட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை.

டி. ஏகம்பவாணன் - கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவர்:

ஓசூர் - பாகலூர் சாலையில் ஐ.டி. பார்க் திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிகூட இல்லை என்பது மக்களின் பெரும் குறை. ஆயிரக் கணக்கான ராணுவ வீரர்கள் உள்ள இந்த மாவட்டத்தில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எம்.பி. நிறைவேற்றவில்லை.

SCROLL FOR NEXT