சிதம்பரம்

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

செய்திப்பிரிவு

ச. மணிவண்ணன் - ரோட்டரி சங்க மண்டலத் தலைவர், சிதம்பரம் :

தொகுதியில் சாலை வசதிகள் மிக மோசம். நாட்டின் பல்வேறு நகரங்களுடன் இணைக்கும் இணைப்புச் சாலைகளை ஏற்படுத்த வேண்டும். சிதம்பரம் நகரின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இங்கிருந்து கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை இல்லை. நாட்டியத்துக்குப் பெயர் பெற்றது சிதம்பரம். இங்கு கலை சார்ந்த பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்.

பி.திருமாவளவன் - முன்னாள் பா.ம.க. பிரமுகர் :

ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக் கப்படும் என்று கூறி 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 5,000 ஹெக்டேர் விவசாய நிலங்களை ஏக்கர் ரூ.20 ஆயிரத்துக்கு அரசு கையகப்படுத்தியது. ஆனால், அந்தத் திட்டம் என்னவானது என்று தெரியவில்லை. கையகப்படுத்திய நிலங்களுக்குத் கூடுதல் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT