2011 சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம்
வென்றவர்: பி. பார்த்தசாரதி (தேதிமுக)
பெற்ற வாக்குகள்: 71524
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. தனசேகரன் (திமுக)
பெற்ற வாக்குகள்: 57430
தேமுதிகவின் பி.பார்த்தசாரதி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். விருகம்பாக்கத்தில், மாநகராட்சி குப்பை அகற்றுவதில் மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை பெற்றுள்ளது. புதிதாக மாநகராட்சியில் இணைக்கப் பட்டுள்ளா பகுதிகளில் சாலை வசதிகள் சீராக இல்லை என்பது மக்களின் கருத்தாக பதிவாகியுள்ளது.
அருகாமையில் பள்ளி கல்லூரிகள் வசதி, ரேஷன் கடைகளில் பொருட்கள் சீராக விநியோகம்,அரசு மருத்துவ வசதிகள் ஆகியவை மக்களிடையே மன நிறைவு ஏற்படுத்தியுள்ளதாக கள ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகிறது.