சிதம்பரம்

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

தொல். திருமாவளவனிடம் பேசினோம். “தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.19 கோடியில் வகுப்பறைக் கட்டிடங்கள், நூலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிமெண்ட், தார் சாலைகள், மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி நிதி ரூ.40 லட்சம் பெறப்பட்டு, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்திடம் இருந்து ரூ. ஐந்து கோடி பெற்று, தலித் சமூகத்தினரின் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நிவாரண நிதி ஐந்து கோடி பெறப்பட்டு, இதய அறுவை சிகிச்சைக்காக அளிக்கப்பட்டது. நடமாடும் கணினி பயிற்சியகம் மூலம் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. வேலைவாய்ப்பு முகாம் நடத்தி சுமார் 1,000 பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளேன். குன்னம் பகுதியில் மத்திய அரசின் சிறப்புப் பள்ளிக்கான கட்டிடம் கட்டப்படுகிறது” என்றார்.

SCROLL FOR NEXT