காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கை:
ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ காந்திய மக்கள் கட்சி ஒருநாளும் ஆதரிக்காது. ஆனால், நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரை ஆ.ராசாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஆரோக்கியமான அரசியலை விரும்பும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், அதிமுக வேட்பாளரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தே.ஜ.கூட்டணி ஆதரவு அளிக்க முற்பட்டால் அது, ராசாவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவ தாக அமையக்கூடும்.
நீலகிரி வாக்காளர்கள் அனை வரும் ஆ.ராசாவுக்கு எதிராக வாக்களிப்பதை ஒரு சமூகக் கடமையாகக் கருத வேண் டும். வலிமையற்ற மாற்றுக் கட்சி களுக்கும் ஆயிரம் வாக்குகளைப் பெறுவதற்குக் கூட வாய்ப்பு இல்லாத சுயேச்சைகளுக்கும் வாக்களிப்பதனால் ராசாவின் வெற்றியைத் தடுக்க இயலாது. இது ராசாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தவிர, ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.