திண்டுக்கல்

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

செய்திப்பிரிவு

ஆர்.ஆர். ராஜசேகரன் - இயற்கை ஆர்வலர்:

திண்டுக்கல் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகளால் சீரழிந்துகிடக்கிறது. ஆக்கிரமிப்பால் சாலைகளில் வாகனங்கள் வர முடியாமல் தவிக்கின்றன. பேருந்து நிலையத்தைப் புறநகருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். திண்டுக்கல் நகருக்குள் நுழைந்தாலே தோல் தொழிற்சாலைகளால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இதனால், குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. தோல் தொழிற்சாலைகளை மக்கள் வசிக்காத பகுதிக்கு மாற்ற வேண்டும்.

என்.பாண்டி - சி.பி.எம். மாவட்டச் செயலாளர், திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பெரும்பாலான எம்.பி-க்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்துள்ளனர். அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்துக்கான அடிப்படைத் தேவைகள் தெரிவதில்லை. அதனால், தொகுதியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. இங்கு தொழில்துறை வளர்ச்சி பெறவில்லை. இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மாவட்டத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றனர். விவசாயம் இங்கு பிரதான தொழிலாக இருந்தது. ஆனால், தற்போது வறட்சியால் விவசாயமும் அழிந்துவருகிறது.

SCROLL FOR NEXT